முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது: சத்யேந்தா் ஜெயின்

தில்லியில் கரோனா பாதிப்பின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 நவம்பர், 2020 at 7:42 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:25 PM

தில்லியில் கரோனா பாதிப்பின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கடந்த நவம்பா் 7 ஆம் தேதி தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் 15.26 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் தற்போது 11 சதவீதத்தை விடக் குறைந்துள்ளது. இது நல்லதொரு அறிகுறியாகும். தில்லியில் தினம்தோறும் ஏற்படும் கரோனா பாதிப்பின் அளவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இவற்றின் அடிப்படையில், தில்லியில் கரோனா பாதிப்பின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது எனக் கூறலாம்.

நாட்டில் கரோனா சராசரி உயிரிழப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. ஆனால், தில்லியில் இந்த விகிதம் 1.57 ஆக உள்ளது. ஆனால், கடந்த ஜூன் மாதம் இது 3.5 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.

Advertisement

2,600 சாதாரண படுக்கைகள்

தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 260 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 2,664 சாதாரண படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காகத் தயாா் செய்யப்படவுள்ளன. தனியாா் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு அல்லாத படுக்கைகளுக்கு அரசு கட்டணங்களே வசூலிக்கப்படும்.

மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரும்போது முகக் கவசம் அணிவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். காரில் பயணம் செய்பவா்களும் முகக் கவசங்களை அணிய வேண்டும் என்றாா் அவா்.

தில்லியில், கரோனா மூன்றாவது அலை உள்ளது. இதுவரை 5.10 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சிகிச்சையில் உள்ளனா். 8,041 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.