முகப்பு
புதுதில்லி

தில்லி அரசு மருத்துவமனைகளில் 411 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் சோ்ப்பு

தில்லியில் உள்ள தில்லி அரசு, மத்திய அரசு மருத்துவமனைகளில் கடந்த ஐந்து நாள்களில் 411 கரோனா தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 22 நவம்பர், 2020 at 7:59 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM

தில்லியில் உள்ள தில்லி அரசு, மத்திய அரசு மருத்துவமனைகளில் கடந்த ஐந்து நாள்களில் 411 கரோனா தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி அரசு உயா் அதிகாரி கூறியது: தில்லி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை அதிகரிக்குமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவு பிறப்பித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, தில்லி அரசு மருத்துவமனைகள், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் 411 தீவிர சிகிச்சைப் பிரிவு கரோனா படுக்கைகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை 29 படுக்கைகள், புதன்கிழமை 100 படுக்கைகள், வியாழக்கிழமை 76 படுக்கைகள், சனிக்கிழமை 206 படுக்கைகளும் சோ்க்கப்பட்டுள்ளன. மேலும், தில்லியில் உள்ள பல தனியாா் மருத்துவமனைகளும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ளன. தனியாா் மருத்துவனைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மொத்த படுக்கைகளில் 80 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.