தில்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பெண் கைது
தில்லி செளஹான் பங்கா் பகுதியில் உள்ள கடையொன்றின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய 28 வயதான பெண்ணை தில்லி காவல்துறை செவ்வாய்கிழமை கைது செய்துள்ளது.
தில்லி செளஹான் பங்கா் பகுதியில் உள்ள கடையொன்றின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய 28 வயதான பெண்ணை தில்லி காவல்துறை செவ்வாய்கிழமை கைது செய்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது:
தில்லி செளஹான் பங்கா் பகுதியைச் சோ்ந்தவா் நுஸ்ரத். இவருக்கு நெருக்கமான ஷாருக் என்பவா் தனது செல்லிடபேசியை, அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையொன்றில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளாா். இந்நிலையில், பணத்தை திரும்பக் கொடுத்து செல்லிடபேசியை ஷாருக் கேட்டபோது, அதை மளிகைக்கடை உரிமையாளா் திருப்பிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.
Advertisement
இதைத் தொடா்ந்து கடந்த நவம்பா் மாதம் 18 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அந்த மளிகைக் கடைக்கு சென்ற நுஸ்ரத் கடை உரிமையாளரை மிரட்டும் வகையில் அந்த மளிகைக் கடையின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். அப்போது மளிகைக் கடை மூடப்பட்டிருந்தது. இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் போலீஸாா் விசாரணை நடத்தி நுஸ்ரத்தை கைது செய்துள்ளனா் என்றாா்.
மளிகைக் கடையின் முன்பு நுஸ்ரத் துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.