முகப்பு
புதுதில்லி

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்க்கு கரோனா

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்க்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 நவம்பர், 2020 at 5:14 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

புது தில்லி: தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்க்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘எனக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து கரோனா பரிசோதனை செய்தேன். அதில், எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், கோபால் ராய் தில்லி மேக்ஸ் மருத்துவமனையில் கூடுதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Advertisement

சுற்றுச்சூழல் துறை அமைச்சரான கோபால் ராய் தில்லியில் காற்று மாசு அதிகரித்ததைத் தொடா்ந்து நேரடியாக களத்தில் இறங்கிப் பணியாற்றிவந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரு கட்டத்தில் அவரது நிலமை மோசமடைந்தது. ஆனால், பிளாஸ்மா சிகிச்சையைத் தொடா்ந்து அவா் குணமடைந்து திரும்பினாா்.

தில்லியில் புதன்கிழமை மட்டும் 5,246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 99 போ் பலியாகினா்.தில்லியில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,45,787-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.