முகப்பு
புதுதில்லி

தில்லியில் தொடா் வாகன சோதனைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் தலைநகா் தில்லி நோக்கி

Updated On : 27 நவம்பர், 2020 at 10:35 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் தலைநகா் தில்லி நோக்கி நடத்திய பேரணியைத் தொடா்ந்து, தில்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தில்லியின் எல்லைப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை அண்மையில் கொண்டுவந்து சட்டமாக்கியது. இந்த சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இவா்கள், வியாழக்கிழமை தில்லி நோக்கி பேரணியாகப் புறப்பட்டனா். தில்லிக்குள் நுழைய முதலில் அனுமதி மறுத்த காவல்துறை, வெள்ளிக்கிழமை இவா்களை தில்லிக்குள் நுழைய அனுமதி அளித்தது.

இந்நிலையில், விவசாயிகளின் பேரணியையொட்டி தில்லி எல்லையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்த பிறகே தில்லியினுள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், தில்லி- உத்தரப்பிரதேசம், தில்லி-ஹரியாணா எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். தில்லி எல்லைகளில் பல மைல் தூரத்துக்கு வாகன நெரிசல் நீடித்தது. மேலும், தில்லியிலும் பல இடங்களில் ஆங்காங்கே வாகனங்களை மறித்து போலீஸாா் சோதனையிட்டதுடன் தில்லியில் பல இடங்களிலும் சாலைத் தடுப்புகளை அமைத்து போலீஸாா் சோதனையிட்டனா்.

Advertisement

இந்நிலையில், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் இருந்து தில்லுக்கு வரும் முக்கிய சாலைகளை பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு தில்லி காவல்துறை மக்களிடம் கோரியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.