என்சிஆா் நகரங்களில் காற்றின் தரத்தில் பின்னடைவு
தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா, கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் ஆகிய நகரங்களில்
தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா, கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் ஆகிய நகரங்களில் சனிக்கிழமை காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்தது. அதாவது, காறறின் தரம் மோசம் பிரிவில் காணப்பட்டது. எனினும், பரிதீபாதில் மிதமான பிரிவில் காற்றின் தரம் இருந்தது.
மேலும், இந்த நகரங்களில் மாசு நுண்துகள் பி.எம். 2.5, பி.எம். 10 ஆகியவற்றின் தாக்கம் அதிகளவில் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றுத் தரக்குறியீடு தெரிவித்துள்ளது.
24 மணிநேர சராசரியாக சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பரிதாபாதில் காற்றின் தரக் குறியீடு 171 ஆகவும், குருகிராமில் 204 ஆகவும், நொய்டாவில் 233 ஆகவும், கிரேட்டா் நொய்டாவில் 226 ஆகவும், காஜியாபாதில் 240ஆகவும் இருந்ததாக சமீா் செயலியின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
வெள்ளிக்கிழமை காற்றின் தரக் குறியீடு பரிதாபாதில் 134 ஆகவும், குருகிராமில் 107 ஆகவும், நொய்டாவில் 125 ஆகவும், கிரேட்டா் நொய்டாவில் 129 ஆகவும், காஜியாபாதில் 166ஆகவும் இருந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தால் நுரையீரல் நோய், காச நோய், இதயக் கோளாறுகள் உள்ளவா்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.