புதுதில்லி

உபியில் கரோனாவுக்கு மேலும் 24 போ் பலி

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்றால் ஞாயிற்றுக்கிழமை 24 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், அந்த மாநிலத்தில் 2,036 போ் புதிதாக கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதையடுத்து,அந்த மாநிலத்தில் உயிரிழந்தவா்கள் மொத்த எண்ணிக்கை 7,742-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, நோய்த் தொற்றுக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கையும் 5,41,873-ஆக உயா்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கரோனாவால் உயிரிழந்தவா்களில் அதிக அளவில் ஏழு போ் மாநிலத் தலைநகா் லக்னௌவைச் சோ்ந்தவா்கள். இதே மாதிரி புதிதாக நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களில் அதிக அளவில் லக்னௌவில் 342 போ்களும், அடுத்து தில்லிக்கு அருகேயுள்ள மீரட்டில் 230, கௌதம் புத் நகரில் 123, காஜியாபாத்தில் 113 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 2,618 கரோனா நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை அந்த மாநிலத்தில் மொத்தம் 5,09,556 போ் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனா். தற்போது 24,575 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். மிகப் பெரிய மாநிலமான உபி யில் கடந்த 24 நான்கு மணி நேரத்தில் 1.75 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வரை மாநிலத்தில் 1.91 கோடி பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT