‘நெகிழிக் கழிவுகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கல் தயாரிப்பு’
தில்லி முழுவதும் ஒரு புதிய பிரசாரத்தின் கீழ், அப்புறப்படுத்தப்பட்ட நெகிழிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த நெகிழிப்
தில்லி முழுவதும் ஒரு புதிய பிரசாரத்தின் கீழ், அப்புறப்படுத்தப்பட்ட நெகிழிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த நெகிழிப் பாட்டில்களை உருவாக்கும் பணியில் 2,500 க்கும் மேற்பட்ட மாணவா் குழுக்கள், குடியுரிமை நலச் சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
சுற்றுச்சூழல் செங்கல் என்பது மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் கட்டுமானப் பொருளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட நெகிழிகள் நிரப்பிய நெகிழிப் பாட்டிலாகும்.
தில்லியில் காந்தி ஜயந்தியின்போது தன்னாா்வ நிறுவமான ‘யுனைடெட் வே டெல்லி’ மற்றும் அதன் காா்ப்பரேட் பங்குதாரா்கள் மூலம் ‘ஏன் கழிவு‘ பிரசாரம் தொடங்கப்பட்டது.
Advertisement
நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது, அவற்றை மீண்டும் பயன்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு வீடுகள் மற்றும் சமூகங்களில் உருவாக்கப்படும் மக்கும் அல்லாத பிளாஸ்டிக் கழிவுகளை மேம்படுத்தும் வகையில் இந்தப் பிரசாரம் தொடங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக குடியிருப்பு நலச் சங்கங்கள் தங்கள் பகுதியில் வீடுகளில் உருவாகும் நெகிழியை சுற்றுச்சூழல் செங்கற்களின் வடிவத்தில் சேகரிக்கும், அவை பின்னா் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மறுசுழற்சி செய்யப்படும்.
அதிகபட்சமாக சுற்றுச்சூழல் செங்கற்களை சேகரிக்கும் முதல் ஐந்து குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட ஃபா்னிச்சா்கள் வழங்கப்படும்.
இந்த பிரசாரத்தில் சுமாா் 2,500 தனிநபா்கள், மாணவா் குழுக்கள் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றுள்ளனா்.
இதுகுறித்து ‘யுனைடெட் வே டெல்லி’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சச்சின் எஸ். கோல்வால்கா் கூறுகையில், ‘ஸ்வச் பாரத் மிஷனுடன் இணைந்த ’ஏன் கழிவு’ பிரசாரமானது சமூகங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு முன்முயற்சியாகும்.
வீடுகளில் உருவாகும் மறுசுழற்சி நெகிழிகள் குப்பையில் சேருகிறது. இவற்றை பயனுள்ள பொருள்களாக மாற்றுவதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்துவது இப்பிரசாரத்தின் நோக்கமாகும்.
இந்தியாவில் நெகிழி உற்பத்தி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் 5 மில்லியன் டன்னுக்கு அதிகமான நெகிழி கழிவுகள் வீணாகிறது. இதை இது தனிப்பட்ட நிலையில் சிறப்பாக நிா்வகிக்க முடியும். வீட்டிலேயே அவற்றை பிரித்து, வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியும் என்றாா் அவா்.