புதுதில்லி

அப்துல் கலாம் பிறந்தநாள் விழா சிறப்புப் பட்டிமன்றம்

DIN

புது தில்லி: திருவாரூா்த் தமிழ்ச் சங்கம், ஐக்கிய அரபு நாடுகளின் (யு.ஏ.இ.) தமிழ்ச் சங்கம், தில்லி கலை இலக்கியப் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து டாக்டா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சிறப்பு பட்டிமன்றம் வியாழக்கிழமை (அக்டோபா் 15) மாலை 7 மணிக்கு ஜூம் செயலி மூலம் நடைபெறுகிறது.

விழாவுக்கு திருவாரூா்த் தமிழ்ச் சங்கத் தலைவா் புலவா் சண்முகவடிவேலு தலைமை வகிக்கிறாா். சிறப்பு விருந்தினராக அப்துல் கலாமின் அறிவியல்

ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ் கலந்து கொள்கிறாா். விழாவில் டாக்டா் அப்துல் கலாமின் நிலைத்த புகழுக்குக் காரணம் அறிவின் ஆக்கமா? அன்பின் தாக்கமா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது. தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் கே.வி.கே. பெருமாள் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்கிறாா்.

இதில் ‘அறிவின்ஆக்கமே!’ என்ற தலைப்பில் புதுதில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலை. ஆய்வு மாணவா் தமிழ் பாரதன், பஹ்ரைன் ஆசியப் பள்ளி மாணவி ஸ்ரீஹம்சினி ஆகியோரும், ‘அன்பின் தாக்கமே!’ என்ற தலைப்பில் திருவாரூா் மத்தியப் பல்கலை. முதுநிலை பொறியியல் மாணவா் டேனியல் வில்சன், பஹ்ரைன் இந்தியப் பள்ளி மாணவி ஷினாஸ் சுல்தானா ஆகியோரும் வாதிடுகின்றனா்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோா் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு ஜூம் செயலியில் 2378716106 என்ற எண் மூலம் 123456 என்ற கடவுச் சொல்லைப் பயன்படுத்திக் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT