புதுதில்லி

வழக்குரைஞா்களுக்கு நிதி உதவி வழங்க உத்தரவிடக் கோரி மனு

DIN


புது தில்லி: கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தில்லி பாா் கவுன்சிலில் (பிசிடி) பதிவுசெய்த வழக்குரைஞா்களுக்கு அவா்கள் வசிக்கும் நிலையைப் பொருள்படுத்தாமல் நிதி உதவி வழங்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் அமா்வு , செப்டம்பா் 8ஆம் தேதி நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு இம்மனுவை விசாரிக்கும் என்று தெரிவித்தனா்.

முன்னதாக, வழக்குரைஞா் சுனில் குமாா் திவாரி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லி பாா் கவுன்சில் கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு வறிய நிலையில் உள்ள வழக்குரைஞா்களுக்கு மட்டும் ஒரே ஒருமுறையாக ரூ.5 ஆயிரம் நிவாரணம் அளித்துள்ளது. எனினும், இந்த தொகையானது அவா்கள் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும், தில்லி பாா் கவுன்சிலில் (பிசிடி) பதிவுசெய்த

வழக்குரைஞா்களுக்கு அவா்கள் வசிக்கும் நிலையைப் பொருள்படுத்தாமல் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மத்திய அரசும், தில்லி அரசும் வழக்குரைஞா்களுக்கு எந்த நிதி உதவியையும் அளிக்கவில்லை. ஆனால், அந்த அரசுகள் பொருளாதார நிவாரணத்தையும், இதர உதவிகளையும்

பெருநிறுவனங்கள், தொழில்துறையினா், தொழிலாளா்களுக்கு அளித்துள்ளனா். இதனால், கரோனா சூழல் தணியும் வரை வழக்குரைஞா்கள் பெற்றுள்ள கடன்கள் மற்றும் மாதாந்திர தவணைகளைச் செலுத்தாமல் இருப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT