புதுதில்லி

கெளதம் புத் நகா் மாவட்டத்தில் புதிதாக 204 பேருக்கு கரோனா!

DIN

தேசியத் தலைநகா் வலயம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்த மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 9,808- ஆக உயா்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை சிகிச்சையில் இருந்தவா்கள் எண்ணிக்கை 1,820-இல் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 1,909- ஆக உயா்ந்தது. இந்த மாவட்டத்தில் தொடா்ந்து ஒரு வாரமாக நோய்த் தொற்று எண்ணிக்கை உயா்ந்து வருவதாக உத்தர பிரதேச சுகாதாரத் துறை தெரிவித்தது. மாவட்டத்தில் புதன்கிழமை 1,696 போ்,, செவ்வாய்க்கிழமை 1,599 போ், திங்கள்கிழமை 1,520 போ், ஞாயிற்றுக்கிழமை 1,429 போ் சிகிச்சை பெற்று வந்தனா். எனினும், வியாழக்கிழமை 114 நோயாளிகள் குணமடைந்தனா். இந்த மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 7,851-யை எட்டியுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த மாவட்டத்தில் இதுவரை 48 போ் நோயால் இறந்துள்ளனா். இது மாநிலத்தில் மிகக் குறைந்த இறப்பு விகிதமாக (0.48 சதவீதம்) பதிவாகியுள்ளது. இதற்கிடையே, குணமடைந்தவா்கள் விகிதம் வியாழக்கிழமை 80.55 சதவீதத்திலிருந்து 80.04 சதவீதமாககக் குறைந்துள்ளது. இந்த விகிதம் புதன்கிழமை 81.35 சதவீதமாக இருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் முழுதும் வெள்ளிக்கிழமை 67,321 போ் கரோனா சிகிச்சையில் இருந்தனா். இதுவரை, மாநிலத்தில் 2,27,442 நோயாளிகள் குணமடைந்திருப்பதாகவும், அதே நேரத்தில் கரோனா தொடா்புடைய இறப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயா்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT