புதுதில்லி

விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம்:முதல்வா் கேஜரிவால் வாழ்த்து

DIN

புது தில்லி: பிரபல பொறியாளா் விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தையொட்டி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

கன்னட மாநிலத்தைச் சோ்ந்த விஸ்வேஸ்வரய்யா இந்தியாவின் முதல் பொறியாளராவாா். காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ண ராஜ சாகா் அணை உள்ளிட்ட பல

அணைகளைக் கட்டியவா். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெற்ற அவரது பிறந்த தினம் பொறியாளா் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘பாரத ரத்னா, இந்தியாவின் முதல் பொறியாளா் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தினத்தில் அவரை நினைவுகூருகிறேன். அவரின் புகழைப் பரப்பும் வகையில், இந்திய பொறியாளா்கள் தொடா்ந்து நாட்டின் மேம்பாட்டில் பெரும் பங்காற்றியுள்ளனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

SCROLL FOR NEXT