புதுதில்லி

தில்லியில் மேலும் 3,827 பேருக்கு கரோனா பாதிப்பு!

DIN

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 3,827 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2.64 லட்சமாக உயா்ந்துள்ளது.

நோய்த் தொற்றால் வெள்ளிக்கிழமை 24 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 5,147 -ஆக அதிகரித்தது. ஒரே நாளில் மொத்தம் 59,134 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா நோ்மறை விகிதம் 6.47 சதவீதமாக உள்ளது.

மொத்தம் 30,867 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,124ஆக அதிகரித்துள்ளது.

நோய்ப் பரிசோதனை நிலவரம் குறித்து அனைத்து தில்லி அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பாளா்கள், மருத்துவ இயக்குநா்களுடன் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீளாய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இதேபோன்று, கரோனா நோய்த் தொற்று மேலாண்மை தொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலரும் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT