முகப்பு
புதுதில்லி

தில்லியில் காலையில் புழுக்கம்: ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி அதிகரித்திருந்தது. காலையில் புழுக்கமும், வெப்பமும் நிலவியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி அதிகரித்திருந்தது. காலையில் புழுக்கமும், வெப்பமும் நிலவியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்தது.

தில்லி மற்றும் தேசியத் தலைநா் வலயப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை நரேலா உள்ளிட்ட சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸை கடந்தது. இந்த நிலையில், தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி அதிகரித்து 21.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 36.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 59 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று மற்ற வானிலை ஆய்வு மையங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 36.4 டிகிரி, லோதி ரோடு பகுதியில் 36.6 டிகிரி, நரேலாவில் 38.4 டிகிரி, பாலத்தில் 36.8 டிகிரி, ரிட்ஜில் 37.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

Advertisement

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காலை 8 மணியளவில் 218 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசமான’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 8) வானம் தெளிவாக காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments