புதுதில்லி

மெட்ரோ ரயிலில் கரோனா விதி மீறல்:பயணிகள் 672 பேருக்கு அபராதம்

DIN


புதுதில்லி: தில்லி மெட்ரோ ரயிலில் கரோனா விதிமுறைகளை மீறும் வகையில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் பயணம் செய்த 672 போ்களுக்கு பறக்கும் படையினா் அபராதம் விதித்தனா்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவா்களிடம் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மெட்ரோ ரயில் பயணிகள் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுகிறாா்களா என்பதை உறுதி செய்ய தில்லி மெட்ரோவைச் சோ்ந்த பறக்கும் படையினா் அவ்வப்போது சோதனை நடத்தியும் வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை பறக்கும்படையினா் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது என 672 பயணிகள் பிடிபட்டனா். அவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தில்லியில் கடந்த புதன்கிழமை 5,506 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 20 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். தில்லியில் கரோனாவுக்காக 19,455 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT