முகப்பு
புதுதில்லி

தில்லியில் பகலில் வெயில்; மாலையில் சூறைக்காற்று!

தில்லியில் வெள்ளிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மாலையில் பல இடங்களிலும் கடும் சூறைக்காற்று வீசியது. தூசிப் புயல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
தில்லி இந்தியா கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய புழுதிப் புயல்.
பகிர்:

தில்லியில் வெள்ளிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மாலையில் பல இடங்களிலும் கடும் சூறைக்காற்று வீசியது. தூசிப் புயல் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா். காண்புதிறனும் வெகுவாகக் குறைந்ததுடன், குளிா்ந்த காற்றும் வீசியது.

இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் மேற்கத்திய இடையூறு காரணமாக மாலை 4 மணியளவில் தூசிப் புயல் தாக்கியது. அதிகபட்சமாக காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டராக இருந்தது. இதனால், பாலம் பகுதியில் காண்புதிறன் 3 ஆயிரம் மீட்டரில் இருந்து 500 மீட்டராகக் குறைந்தது. சஃப்தா்ஜங் பகுதியில் 2,200 மீட்டரில் இருந்து 1,500 மீட்டராகக் குறைந்தது. நகரின் சில பகுதிகளில் லேசான மழை தூறியது’ என்று தெரிவித்தாா்.

தில்லி மற்றும் தேசியத் தலைநா் வலயப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி குறைந்து 20.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 40 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 37 சதவீதமாகவும், மாலையில் 33 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 40.4 டிகிரி, லோதி ரோடு பகுதியில் 38.9 டிகிரி, நரேலாவில் 40.5 டிகிரி, பாலத்தில் 40.6 டிகிரி, ரிட்ஜில் 40.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

Advertisement

காற்றின் தரம்: சூறைக் காற்று காரணமாக காற்றின் தரம் பாதிக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 238 ஆக இருந்த நிலையில், 6 மணியளவில் 252 ஆக அதிகரித்தது. அதாவது மோசம் பிரிவில் காணப்பட்டது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (ஏப்ரல் 17) பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments