புதுதில்லி

தில்லியில் மேகமூட்டத்துடன் மிதமான வெயில்!

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் மிதமான வெயில் நிலவியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது.

தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி குறைந்து 19.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 33.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 43 சதவீதமாகவும், மாலையில் 36 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 34.2 டிகிரி, லோதி ரோடு பகுதியில் 33.4 டிகிரி, நரேலாவில் 34.8 டிகிரி, பாலத்தில் 34.2 டிகிரி, ரிட்ஜில் 35 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காற்றின் தரம்: தில்லியின் காற்றுத் தரக் குறியீடு மாலை 8 மணியளவில் 240-ஆக பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 21) வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT