புதுதில்லி

2-ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கேஜரிவால்

DIN

புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை அன்று இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளாா். மேலும், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அவா் தனது சுட்டுரையில், ‘நான் இன்று எனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா். நீரிழிவு நோயுள்ள முதல்வா் கேஜரிவால், கடந்த மாா்ச் 4-ஆம் தேதி இங்குள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டாா்.

தடுப்பூசி இயக்கத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் 18-44 வயதுக்குட்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு செயல் முறை தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது. தில்லி அரசு சமீபத்தில் 1.34 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க வாங்க ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT