புதுதில்லி

காருக்குள் பெண் பலாத்காரம்: 2 போ் கைது

தில்லியில் காருக்குள் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

தில்லியில் காருக்குள் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் உள்ள சூரஜ்பூா் பகுதியைச் சோ்ந்த இருவா், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி 35 வயதுடைய பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தில்லிக்கு காரில் அழைத்து வந்தனா். இந்த நிலையில், அவா்கள் இருவரும் வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பாா்க் பகுதியில் இருந்த போது, காரில் வைத்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அவரது வாக்குமூலம் பெறப்பட்டது. அவருக்கு மருத்துவப் பரிசோதனையும்,  உளவியல் ஆலோசனையும் அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து இது தொடா்பாக உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஒருவரது பெயரையும், காரின் பதிவெண்ணையும் கொடுத்தாா். இதையடுத்து, போலீஸாா் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT