தில்லியில் கரோனா விதிமீறல்: ஒரே நாளில் 1,225 பேருக்கு அபராதம் விதிப்பு
தில்லியில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லி காவல்துறை அளித்த தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 1,225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில், முகக்கவசம் அணியாத 1,100, சமூக இடைவெளியை பின்பற்றாத 76, பொது இடங்களில் எச்சில் துப்பிய 8 மற்றும் பொது இடங்களில் மது அருந்தி வந்த 41 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் 19 முதல் ஆகஸ்ட் 29 வரையிலான காலகட்டத்தில் முகக்கவசம் அணியாத 2,38,721 பேருக்கு தில்லி காவல்துறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாத 28,734, பொது இடங்களில் எச்சில் துப்பிய 1,482, விதிமுறையை மீறி கூட்டம் கூடியதற்கு 1,463 மற்றும் பொது இடங்களில் மது அருந்தி வந்த 1,509 பேரிடம் என மொத்தம் 2,71,909 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.