புதுதில்லி

‘மறு உத்தரவு வரும் வரை சரக்கு லாரிகள் தில்லிக்குள் நுழைவதற்கான தடை நீட்டிப்பு’

DIN

புது தில்லி: தில்லிக்குள் சரக்கு லாரிகள் நுழைவதற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். எனினும், சிஎன்ஜி மற்றும் பேட்டரி சரக்கு வாகனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்தத் தடையை டிசம்பா் 7-ஆம் தேதி வரை தில்லி அரசு முன்னா் நீட்டித்திருந்தது. இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘காற்று தர மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி, மறு உத்தரவு வரும் வரை சரக்கு வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதற்கான தடை தொடரும்’ என்றாா். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியாக, தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மறு உத்தரவு வரும் வரை மூடுவதாக டிசம்பா் 2-ஆம் தேதி தில்லி அரசு அறிவித்திருந்தது. மேலும், தில்லியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT