முகப்பு
புதுதில்லி

தில்லியில் 123 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மேலும் 123 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,35,916-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

புது தில்லி: தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மேலும் 123 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,35,916-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 63,322 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 39,543 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 23,779 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.19 சதவீதமாக உள்ளது.

Advertisement

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை மேலும் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,877-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து சனிக்கிழமை 151 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,23,865-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,174 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 471 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 5,587 படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments