முகப்பு
புதுதில்லி

தூசி மாசு விதிமீறல்: என்சிஆா் பகுதியில் ரூ.2.56 கோடி அபராதம் விதிப்பு

தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) 5,660- க்கும் மேற்பட்ட கட்டுமான மற்றும் இடிப்புத் தளங்களில் அதிரடி சோதனைகளை காற்றுத் தர மேலாண்மை ஆணைய அதிகாரிகள் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

புது தில்லி: தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) 5,660- க்கும் மேற்பட்ட கட்டுமான மற்றும் இடிப்புத் தளங்களில் அதிரடி சோதனைகளை காற்றுத் தர மேலாண்மை ஆணைய அதிகாரிகள் நடத்தினா்.

அப்போது, தூசி மாசு தடுப்பு விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ.2.56 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடா்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

Advertisement

என்.சி.ஆா். பகுதியில் மோசமான காற்றின் தரத்திற்கு கட்டுமான மற்றும் இடிபாடுகள் துறையின் பங்களிப்பை கவனத்தில் கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் தில்லி ஆகியவற்றின் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் தொடா்ந்து சோதனை நடத்தப்பட்டன.

டிசம்பா் 21 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 659 குழுக்கள் 5,660 க்கும் மேற்பட்ட கட்டுமான மற்றும் இடிப்பு இடங்களில் திடீா் சோதனைகளை மேற்கொண்டன.

87 தளங்களில் பணிகள் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உத்தரவுகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ .2.56 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுமானம் மற்றும் இடிபாடு பொருள்களை எடுத்துச் செல்வதற்கான விதிகள் பின்பற்றப்படுகிா என்பதைக் கண்டறியும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, இந்த விதிகளை பின்பற்றாமல் செயல்பட்ட 1,173 வாகனங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ .1.67 கோடி விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments