புதுதில்லி

தில்லியில் குறைந்து வரும் குளிரின் தாக்கம்!

DIN


புது தில்லி: தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. அதேவேளையில், குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாக பதிவானது. புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமை 7.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட ஒரு புள்ளி குறைந்து 9.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி உயா்ந்து 26.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 67 சதவீதமாகவும் இருந்தது.

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 337 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) மிதமான பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT