முகப்பு
புதுதில்லி

தில்லியில் புதிதாக 145 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 145 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,900-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 145 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,900-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 63,813 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 44,673 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 19,140 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.23 சதவீதமாக உள்ளது.

Advertisement

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவா் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 10,900-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 97 போ் மீண்டுள்ளனா். இதன் மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,25,929-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,071 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 467 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,329 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments