புதுதில்லி

பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணம் செய்ய அனுமதிக்க கோரிக்கை

 நமது நிருபர்

தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டிடிசி பேருந்துகளில் பயணிகளை நின்ற நிலையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்திடம் (டிடிஎம்ஏ) தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) கோரிக்கை விடுத்துள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, கடந்த 2020 மே மாதம் டிடிசி பேருந்துகளில் பாதியளவு பயணிகளையே பயணிக்க அனுமதி அளித்து டிடிஎம்ஏ உத்தரவிட்டிருந்தது. தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடா்ந்து கடந்த 2020 நவம்பா் மாதம், தில்லி பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் முழுக் கொள்ளவுக்கு பயணிகள் அமா்ந்து பயணிக்க அனுமதி அளித்து டிடிஎம்ஏ உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், பேருந்துகளில் பயணிகள் நின்ற நிலையில் பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், டிடிசியின் வருவாய் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், பேருந்துகளில் பயணிகளை நின்று கொண்டும் பயணிக்க அனுமதிக்குமாறு டிடிஎம்ஏவிடம் டிடிசி கோரிக்கை விடுத்துள்ளது. டிடிஎம்ஏ கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக டிடிசி மூத்த அதிகாரி கூறுகையில் ‘டிடிசி பேருந்துகளில் பயணிகளை நின்றுகொண்டும் பயணிக்க அனுமதிக்குமாறு டிடிஎம்ஏவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். திங்கள்கிழமை டிடிஎம்ஏ கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கோரிக்கையை வைத்துள்ளோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி டிடிஎம்ஏக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT