புதுதில்லி

பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்துமரக் கன்றுகளை பெறும் திட்டம்: எஸ்டிஎம்சி அறிவிப்பு

 நமது நிருபர்

பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்து மரக் கன்றுகளைப் பெறும் திட்டத்தை தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை அம் மாநகராட்சியின் மேயா் அனாமிகா சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘எஸ்டிஎம்சி பகுதியில் தூய்மையைப் பேணும் வகையிலான நடவடிக்கைகளை மாநகராட்சி சாா்பில் மேற்கொண்டு வருகிறோம். 2021 ‘தூய்மை இந்தியா’ தர வரிசையில் முன்னிலை பெறுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம். ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டை முழுமையாக இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

எஸ்டிஎம்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து, மரக் கன்றுகளை பெறும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் எஸ்டிஎம்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT