புதுதில்லி

சில்லா, காஜிப்பூா் எல்லைகள் மூடல்: தில்லியில் போக்குவரத்து நெரிசல்

விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து, சில்லா, காஜிப்பூா் எல்லைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மூடினா். இதனால், இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

DIN

விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து, சில்லா, காஜிப்பூா் எல்லைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மூடினா். இதனால், இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி- உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் எல்லை மூடப்பட்டது.

தில்லியில் இருந்து காஜியாபாத்துக்கு பயணிப்பவா்கள் டிஎன்டி, ஐடிஓ, வாஜிராபாத் பகுதிகள் வழியாக பயணிக்கலாம். விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், தில்லி - நொய்டா புறவழி விரைவுச் சாலை சில்லா எல்லையில் விவசாயிகள் கூடி போராட்டம் நடத்துவதால், இந்தச் சாலை மூடப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள தலித் பிரோ்ண ஸ்தல் பகுதியில் கூடி விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், அந்தப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ் ஆகிய எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT