அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.92.16 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.92.16 ஆக நிறைவு.
வணிகம்அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.92.16 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.92.16 ஆக நிறைவு.
மும்பை: ஈரான் நெருக்கடியைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் காரணமாக, இன்றைய அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.92.16 ஆக முடிவடைந்தன.
அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் மத்தியில், டாலர் குறியீடு 98 என்ற நிலையை கடந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு மேல் அழுத்தம் அதிகரித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி, உள்நாட்டு பங்குச் சந்தையில் தொடரும் எதிர்மறையான போக்கு ஆகியவற்றால், இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ.92.05 ஆக தொடங்கி, பிறகு ரூ.92.35 என்ற இன்ட்ராடே குறைந்த அளவைத் தொட்டது. முடிவில் டாலருக்கு நிகரான எப்போதும் இல்லாத குறைந்த அளவான ரூ.92.16ஆக முடிவடைந்தது. இது அதன் முந்தைய வர்த்தக நாளின் கடைசி வர்த்தகத்திலிருந்து 67 காசுகள் சரிவு.