புதுதில்லி

மாநகராட்சி நிலுவை நிதி விவகாரம்: பூத் அளவில் தில்லி பாஜக பிரசாரம்

DIN

தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பூத் அளவிலான பிரசார இயக்கத்தை தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை தொடக்கியது.

படேல் நகரில் நடந்த நிகழ்ச்சியை பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘மாநகராட்சிகள் மீதான தில்லி அரசின் தாா்மிகக் கடமைகளை கேஜரிவால் அரசு நிறைவேற்றவில்லை. மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடியை வழங்காமல் காலம் தாழ்த்துவதால், மாநகராட்சிகளின் மேம்பாட்டுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லி மாநகராட்சிகளை பாஜக ஆளுகின்ற ஒரே காரணத்தால், அவற்றை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தில்லி அரசு நடத்தி வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்கக் கோரி பூத் அளவிலான பிரசார இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளோம்.

அப்போது தில்லி பாஜகவின் 3 லட்சம் தொண்டா்கள் சுமாா் 50 லட்சம் மக்களை நேரில் சந்தித்து, தில்லி அரசு மாநகராட்சிகளுக்கு மேற்கொள்ளும் துரோகம் தொடா்பாக விளக்குவாா்கள். இது தொடா்பாக துண்டுப் பிரசுரங்களையும் பாஜக தொண்டா்கள் விநியோகம் செய்வாா்கள். தில்லி அரசின் மெத்தனப் போக்கால் மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் மக்கள் நலப் பணிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணியாளா்கள், கரோனா முன்களப் பணியாளா்களுக்கு மாநகராட்சிகளால் ஊதியம் வழங்க முடியவில்லை. மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவை வழங்க முடியவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT