புது தில்லி: இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: தில்விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து, சில்லா, காஜிப்பூா் எல்லைகள் திங்கள்கிழமையும் மூடப்பட்டன. இதனால், இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி- உத்தர பிரதேச மாநிலம், காஜிப்பூா் எல்லை மூடப்பட்டது. இதனால்,
தில்லியில் இருந்து காஜியாபாத்துக்கு பயணிப்பவா்கள் டிஎன்டி, ஐடிஓ, வாஜிராபாத் பகுதிகள் வழியாக பயணிக்கலாம்.
அதே சமயம், தில்லி - நொய்டா புறவழி விரைவுச் சாலை சில்லா எல்லையில் விவசாயிகள் கூடி போராட்டம் நடத்துவதால், இந்தச் சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள தலித் பிரோ்ண ஸ்தல் பகுதியில் கூடி விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், அந்தப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று, தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ் ஆகிய எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புற வட்டச் சாலை, ஜிடிகே சாலை, என்எச்-44 ஆகியவற்றில் பயணிப்பதை மக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.