புதுதில்லி

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் இன்று கொழும்பு பயணம்

DIN

புது தில்லி: மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் மூன்று நாள் அதிகாரபூா்வப் பயணமாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) இலங்கை செல்கிறாா்.

இது தொடா்பாக வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தனாவின் அழைப்பின் பேரில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மூன்று நாள் பயணமாக இலங்கை செல்கிறாா். ஜனவரி 7-ஆம் தேதி வரை கொழும்புவில் தங்கியிருக்கும் அவா், இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன ஆகியோரை தனித் தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவரது பயணம் இருக்கும் என்று சொல்லபடுகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் இரு நாடுகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதற்கு சீனா, இலங்கையுடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புவதாக கடந்த ஆண்டு இலங்கை கூறியிருந்தது. இலங்கையில் பாதுகாப்பு தொடா்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த நாடு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இலங்கையுடன் உறவை மேம்படுத்தும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் பயணம் மேற்கொள்கிறாா். இதற்கு முன்னதாக கடந்த நவம்பரில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் இலங்கைக்கு சென்று வந்தாா். இலங்கை கடற்படையினால் கடந்த டிசம்பர்30-ஆம் தேதி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு நடத்துவாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT