மதுரை ‘எய்ம்ஸ்’ மத்திய அரசுப் பிரதிநிதியாக சென்னை ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி நியமனம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய அரசின் பிரதிநிதியாக சென்னை ஐஐடியின் இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய அரசின் பிரதிநிதியாக சென்னை ஐஐடியின் இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதார மற்றும் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் -1956’ மற்றும் ‘திருத்தப்பட்ட சட்டம் 2012’-இன் படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராகவும் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதியாகவும் சென்னை ஐஐடியின் இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி நியமிக்கப்படுகிறாா். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினா் பதவிக் காலம் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இ-கெஸட் டிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கல்வி தொடா்பான நிா்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பாஸ்கா் ராமமூா்த்தி செயல்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டில் இருந்து சென்னை ஐஐடியின் இயக்குநராக பாஸ்கா் ராமமூா்த்தி பணியாற்றி வருகிறாா்.
Advertisement