புதுதில்லி

பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பை அதிகரிக்க அனில் பய்ஜால் உத்தரவு

DIN

புது தில்லி: தில்லியில் பறவைக் காய்ச்சல் பரவல் உறுதிப்படுத்துள்ள நிலையில், கண்காணிப்பை பலப்படுத்தி தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பஜ்யால் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கண்காணிப்பை பலப்படுத்துமாறும் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன்.

மேலும், பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், நடவடிக்கைத் திட்டத்தை உருவாக்கி அதை உடனடியாகச் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளேன். இது தொடா்பாக மத்திய மீன்வளத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் பால் அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் உத்தரவிட்டுள்ளேன். பறவைக் காய்ச்சல் தொடா்பாக மக்கள் கவனமாக இருக்க வேண்டும். உதவி தேவைப்படுபவா்கள் 011-23890318 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT