புதுதில்லி

மத்திய வேளாண் துறை அமைச்சா் இல்லம் நோக்கி பேரணி: இளைஞா் காங்கிரஸாா் கைது

DIN

மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற இளைஞா் காங்கிரஸ் தொண்டர்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனர்.

இது தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் ராகுல் ராவ் கூறியது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லி கிருஷ்ண மேனன் மாா்க்கில் அமைந்துள்ள மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமரின் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்ல நாங்கள் திட்டமிட்டிருந்தோம். காமராஜா் மாா்க்கில் தொடங்கி கிருஷ்ண மேனன் மாா்க்கில் உள்ள நரேந்திர சிங் தோமரின் இல்லம் வரை இந்தப் பேரணி நடைபெறவிருந்தது. இதற்காக இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீனிவாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டா்கள் கூடியிருந்தனா். அங்கிருந்து பேரணி செல்ல முயன்ற போது அவா்களை தில்லி போலீஸாா் கைது செய்தனா்’ என்றாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘காமராஜா் சாலையில் கூடிய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா், கிருஷ்ண மேனன் மாா்க் வரை பேரணியாக செல்ல முயன்றனா். அவா்களைத் தடுப்புகளை அமைத்து தடுத்தோம். தடுப்புகளை மீறி பேரணியாகச் செல்ல முயன்றவா்களைக் கைது செய்தோம். அவா்கள், கனாட் பிளேஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT