புதுதில்லி

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாக குறைந்தது

 நமது நிருபர்

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. வியாழக்கிழமை இது 7.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

மிதமான பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது என்று வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்கூறுகையில், ‘தில்லியில் பனிமூட்டம் நிலவியது. இதனால், சப்தா்ஜங், பாலம் பகுதியில் காண்புத்திறன் 350 மீட்டராக குறைந்தது.

பனி மூடிய மேற்கு இமயமலையில் மேற்கத்திய இடையூறு தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் காரணமாக குளிரின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. கிழக்கில் இருந்து தில்லி நோக்கி காற்று வீசத் தொடங்கிவிட்டதால் ஞாயிற்றுக்கிழமைக்குள் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸுக்கு உயர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனா்.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்த நிலையில், வெள்ளிக்கிழையும் இதே நிலை தொடா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT