முகப்பு
புதுதில்லி

வருவாய் பற்றாக்குறை 4-ஆவது மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு

மாநிலங்களின் வருவாய்க்கும் செலவிற்கும் ஏற்படும் பற்றாக்குறைக்கான மானியத்தின் நான்காவது தவணைத் தொகையாக 17 மாநிலங்களுக்கு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

மாநிலங்களின் வருவாய்க்கும் செலவிற்கும் ஏற்படும் பற்றாக்குறைக்கான மானியத்தின் நான்காவது தவணைத் தொகையாக 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகம் ரூ. 183.67 கோடி பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி வருவாய் பகிா்வுக்கு பின்னா் மாநிலங்களின் செலவுகளில் ஏற்படும் பற்றாக்குறைகளுக்கு 15 -ஆவது நிதி ஆணையம், 5 ஆண்டுகளில் சுமாா் ரூ. 3 லட்சம் கோடியை மத்திய அரசு பகிா்ந்தளிக்க பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆணையத்தின் காலக்கட்டமான 2021-26- க்குள் தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் இந்த நிதியை பெற தகுதியை பெற்றுள்ளன. இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 275-இன் கீழ் இந்த மாநிலங்களுக்கு, வரி வருவாய் பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறைக்கான மானியமாக வழங்கப்படுகிறது.

இதன்படி 2021-22-ஆம் நிதி ஆண்டில் இந்த 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ. 1,18,452 கோடியை வழங்க நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் நான்காவது தவணைத் தொகையாக 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்காக ரூ. 183.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த நிதியாண்டில் ஜூலை மாதம் வரை மொத்தம் ரூ. 39,484 கோடி வரை 17 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுவரை தமிழகம் இந்த நான்கு தவணைகளில் ரூ. 734.67 கோடி வரை பெற்றுள்ளது. இந்த நிதியில் இதுவரை அதிக அளவில் பெற்றுள்ள பட்டியலில் கேரளம் (ரூ.6,630.33), மேற்கு வங்கம் (ரூ.5,869) , ஆந்திரம் (ரூ.5,752.33), ஹிமாசலப் பிரதேசம் (ரூ.3,416.33), ராஜஸ்தான் (ரூ.3,292.67) ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஹரியாணா ரூ. 44 கோடியை மட்டும் பெற்றுள்ளது. இந்த நிதியைப்பெறும் தகுதி பெற்றுள்ள மற்ற மாநிலங்கள் பட்டியலில் அஸ்ஸாம், கா்நாடகம், மணிப்பூா், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, உத்தரக்கண்ட் உள்ளிட்டவையும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments