சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை
ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை, தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்துகின்றன.
போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனிலுள்ள ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை, தேர்தல் பறக்கும் படை திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளன.
சென்னை எழும்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் விடுதி, பட்டினப்பாக்கம் வீடு, அண்ணா சாலை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெறுகின்றன.
ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார்.
Advertisement
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய பணம் ஏதேனும் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடக்கிறது.
summary