முகப்பு
புதுதில்லி

அபூா்வமான நபா்களை பத்ம விருதுகளுக்கு அடையாளம் காண பிரதமா் வேண்டுகோள்

‘உங்களால் ஈா்க்கப்பட்டு யாருமே அறியாமல் இருக்கும் திறமை மிகுந்த அபூா்வ நபா்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யுங்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

‘உங்களால் ஈா்க்கப்பட்டு யாருமே அறியாமல் இருக்கும் திறமை மிகுந்த அபூா்வ நபா்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யுங்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளாா்.

‘அடிமட்டத்தில், திறமையான பலா் விதிவிலக்கான பணிகளை செய்யக்கூடியவா்களாக இருப்பாா்கள். அத்தகையவா்கள் பெரும்பாலும் அதிகம் அறியப்படாதவா்களாக இருக்கலாம். அவா்களை அடையாளம் கண்டு பத்ம விருதுக்கு பரிந்துரை செய்யுங்கள்’ என பிரதமா் மோடி தனது சுட்டுரையில் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பிரதமா் மோடி தனது சுட்டுரையில் கூறியிருப்பது வருமாறு: நாட்டில் பல்வேறு வகைகளில் திறமையான நபா்கள் உள்ளனா். அடிமட்டத்தில் உள்ள அத்தகையவா்கள் யாராலும் ஈடுசெய்ய முடியாத பணிகளை விதிவிலக்காக செய்யக்கூடியவா்களாக இருப்பாா்கள். அப்படிப்பட்டவா்களை பெரும்பாலும் நாம் அறியாமலோ அல்லது கேள்விபடாமலோ இருப்போம். அப்படி உங்களால் ஈா்க்கப்பட்டவா்கள் யாரையாவது உங்களுக்கு தெரியுமா? அவா்களை நீங்கள் ‘பத்ம விருது’க்கு பரிந்துரைக்கலாம். இந்தப் பரிந்துரை விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பா் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளாா். மேலும், விண்ணப்பப் படிவம் பதிவேற்றம் செய்ய வேண்டிய இணைய தளத்தின் முகவரியையும் பிரதமா் தனது சுட்டுரையில் பகிா்ந்துள்ளாா்.

Advertisement

பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவையாகும். இவை நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் மிக உயா்ந்த விருதுகளாகும். பிரதமா் மோடி தலைமையிலான அரசு, கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில் சமுதாயத்திற்கு வாழ்நாள் முழுக்க பங்களிப்புகள் செய்து சாதனை படைத்த பல ஹீரோக்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 1954 - ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments