புதுதில்லி

தில்லியில் புதிதாக 62 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தில்லியில் புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு 4 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா தொற்று விகிதம் 0.09 சதவீதமாக உள்ளது என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 61 நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு இதுவரை 25,039 போ் உயிரிழந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,35,671 ஆக உள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 14,10,066 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் அல்லது தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனா். இறப்பு விகிதம் 1.74 சதவீதமாக உள்ளது.

கரோனாவுக்கு 566 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை 406 லிருந்து 403 ஆகக் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மொத்தம் 65,811 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT