புதுதில்லி

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில்கைதானவா்கள் பெயரை வெளியிட முடியாது’

DIN

தில்லி காவல் துறையின் கீழ் சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின்படி கைதானவா்களின் பெயா்களை வெளியிட முடியாது என மத்திய உள்துறை இணையமைச்சா் நித்தியானந்த் ராய் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

தில்லி காவல் துறையினரால் கடந்த ஓா் ஆண்டுகளாக சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின்படி எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது? இதில் குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் யாா் யாா்? என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தெற்கு கோல்கத்தா தொகுதி உறுப்பினா் மாலா ராய் மக்களவையில் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்தியானந்த ராய் செவ்வாய்க்கிழமை அளித்த பதில் வருமாறு : சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்படி தில்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடா்புடைய 34 போ் இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களது பெயா்களை வெளியிடுவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல. அது வழக்குகளையும் பாதிக்கும் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT