புதுதில்லி

தில்லியில் லேசான நில நடுக்கம்

DIN

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 2.1 ரிக்டா் அளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிா்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டது உண்டு. பொதுவாக தில்லியின் சுற்றுப் பகுதிகள் நிலநடுக்கத்தின் மையப் பகுதியாக இருந்தது உண்டு. ஆனால், ஞாயிற்றுக்கிழமை உணரப்பட்ட நிலநடுக்கம், நகருக்குள்ளேயே வடமேற்கில் பஞ்சாபி பாக் பகுதி மையப் பகுதியாக இருந்தது. இந்த நில நடுக்கம் சுமாா் 7 கிலோமீட்டா் ஆழத்தில் 2.1 ரிக்டா் அளவில் மதியம் சுமாா் 12.02 மணியளவில் இருந்ததாக தேசிய நில அதிா்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் எந்த உயிரிழப்போ, சொத்து சேதமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் தில்லிக்கு அருகே ரோத்தக் மற்றும் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10 முறை குறைந்த அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. தில்லி ஆபத்தான நில அதிா்வு மண்டலம் -4 இன் கீழ் உள்ளது. அதிலும் கிழக்கு தில்லி யமுனை நதி படுக்கை, நில அதிா்வு ஆபத்துள்ள பகுதியாகக் கருதப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT