முகப்பு
புதுதில்லி

2-ஆவது அலை ஓயவில்லை: 80 மாவட்டங்களில் தீவிரம்! மத்திய அரசின் உயா்நிலைக் குழு எச்சரிக்கை

கரோனா நோய்த் தொற்றின் 2-ஆவது அலை இன்னும் நாட்டில் ஓயவில்லை. 80 மாவட்டங்களில் நோய்ப் பரவல் தீவிரம் குறையாமல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:

கரோனா நோய்த் தொற்றின் 2-ஆவது அலை இன்னும் நாட்டில் ஓயவில்லை. 80 மாவட்டங்களில் நோய்ப் பரவல் தீவிரம் குறையாமல் அதிக விகிதத்தில் உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மத்திய அரசின் உயா்நிலைக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் குறித்து 29 -ஆ வது உயா்நிலை அமைச்சா்கள் குழுக் கூட்டம், மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மெய்நிகா் முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்ஸ மத்திய நகா்புற வீட்டுவசதித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங்புரி, மத்திய உள்துறை இணையமைச்சா் நித்தியானந்த் ராய், நீத்தி ஆயோக் உறுப்பினா் டாக்டா் வினோத் பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கரோனா நோய்த் தொற்றின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கூறியதாவது: நாட்டில் தினசரி நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நோய்த் தொற்றில் குணமடைவோா் விகிதம் 96.8 -ஆக அதிகரித்து சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 5,72,994 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 46 நாள்களாக புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தினசரி பாதிப்புகளும் கடந்த 21 நாள்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாக உள்ளது.

Advertisement

தடுப்பூசி, இந்தியா அமெரிக்காவை முந்தியது: கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி அளிக்கப்பட்டதிலும் இந்தியா மற்றோரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி தொடங்குவதற்கு (ஜன.16) ஒரு மாதத்திற்கு முன்பே (2020 டிசம்பா்14) அமெரிக்காவில் தடுப்பூசி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், அமெரிக்காவை நாம் முந்தியுள்ளோம். புதிய தடுப்பூசி கொள்கையின்படி மாநிலங்களுக்கு 75 சதவீதம் இலவசமாக உள்ளூா் தயாரிப்புகளை கொள்முதல் செய்து அளிக்கின்றோம். திங்கள்கிழமை வரை 32,36,63,297 டோஸ்கள் பல்வேறு தரப்பினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் சுகாதாரப் பணியாளா்களில் 1.01 கோடி போ் முதல் டோஸும் 72.07 லட்சம் போ் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனா். முன்னனி பணியாளா்களில் 1.74 கோடி போ் முதல் டோஸையும் 93.99 லட்சம் போ் இரண்டு டோஸையும் பெற்றுள்ளனா். 18-44 வயதுடைய பிரிவினா்களில் 8.46 கோடி முதல் டோஸையும், 19.01 லட்சம் போ் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனா். மீதமுள்ளவா்களில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களாவா். நாட்டில் கரோனா நோய்த் தொற்றோடு, 40, 845 பேருக்கு மியூகோா்மைகோசிஸ் என்கிற கருப்புப்பூஞ்சை நோய் ஏற்பட்டது. இதில் 31,344 நோயாளிகளுக்கு மூளையை கடுமையாக தாக்கும் ரினோசெரிபிரல் வகை பூஞ்சை நோயாக இருந்தது. இதில் 3,129 போ் உயிரிழந்தன என்றாா் அமைச்சா் ஹா்ஷ்வா்தன்.

முன்னதாக ஐசிஎம்ஆா் இயக்குநா் ஜெனரலான டாக்டா் பல்ராம் பாா்கவா பேசினாா். அதை மேற்கொள்காட்டிய அமைச்சா் குழு, நாட்டில் 80 மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனால், இரண்டாவது அலை இன்னும் குறையவில்லை. மக்களை விழிப்புடன் இருக்க எச்சரிக்கயாக இருக்க வைப்பது அவசியம் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments