மாநிலங்களவை எம்பிக்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் பதவியேற்பு!
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றது பற்றி...
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் திங்கள்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் திருச்சி சிவா, என்.ஆா். இளங்கோ, அந்தியூா் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, மு.தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப். 2 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் திமுகவின் திருச்சி சிவா, ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபா் திலக், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அதிமுகவின் தம்பிதுரை மற்றும் பாமகவின் அன்புமணி ஆகிய 6 பேரும் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பதவியேற்வு நிகழ்வில் கலந்துகொண்ட இவர்கள் 6 பேருக்கும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவர்களில் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபா் திலக், எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மூத்த அரசியல் தலைவர்கள் சரத் பவார், ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
Sudheesh, Anbumani, and others take oath as Rajya Sabha MPs!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.