முகப்பு
புதுதில்லி

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து தில்லி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தில்லியில் பாஜக தலைமையகம் அருகே தில்லி காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தில்லியில் பாஜக தலைமையகம் அருகே தில்லி காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி காங்கிரஸ் கட்சியினா் அந்தக் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள தீனதயாள் உபாத்யாய் மாா்க்கில் இருந்து பேரணியாக புறப்பட்டு, அதே சாலையில் அமைந்துள்ள பாஜக தலைமையகம் நோக்கிச் சென்றனா். இந்தப் போராட்டத்தை தில்லி காங்கிரஸ் துணைத் தலைவா்கள் அபிஷேக் தத், சிவானி சோப்ரா, ஜெய்கிஷண், முதித் அகா்வால், அலி மெஹ்ந்தி, மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தவன் மற்றும் பலா் முன்னெடுத்தனா். எனினும், போலீஸாா் அவா்களை முன்னே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைஉயா்வில் இருந்து மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினா். இந்தப் போராட்டத்தின் போது யாரும் போலீஸாரால் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என தில்லி காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான பா்வேஷ் தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments