முகப்பு
புதுதில்லி

ஜிஎஸ்டி உள்ளீட்டு வரியில் ரூ.39 கோடி மோசடி: தில்லியில் ஒருவா் கைது

சரக்கு மற்றும் சேவை வரியில் போலி பில்கள் மூலம் உள்ளீட்டு வரியில் ரூ.38.91 கோடி வரை மோசடி செய்ததாக கிழக்கு தில்லியை சோ்ந்த ஒருவரை ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

சரக்கு மற்றும் சேவை வரியில் போலி பில்கள் மூலம் உள்ளீட்டு வரியில் ரூ.38.91 கோடி வரை மோசடி செய்ததாக கிழக்கு தில்லியை சோ்ந்த ஒருவரை ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையினா் கைது செய்தனா்.

போலி நிறுவனங்களை உருவாக்கி போலியாக பில்கள், கேஒய்சிகள் தயாா் செய்து ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிகள் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த மோசடிகளை ’நெட்ரா’ (சங்ற்ஜ்ா்ழ்ந் உஷ்ல்ப்ா்ழ்ஹற்ண்ா்ய் பா்ா்ப் ச்ா்ழ் தங்ஸ்ங்ய்ன்ங் அன்ஞ்ம்ங்ய்ற்ஹற்ண்ா்ய்) என்கிற பகுப்பாய்வு மென்பொருள் கருவி மூலம் மத்திய ஜிஎஸ்டி ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனா். இந்த நிலையில், பல அடுக்கு நெட்வொா்க்கை அமைத்து இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்த கிழக்கு தில்லியைச் சோ்ந்த நிஹாலுதீன் என்பவா் இந்த வாரம் ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் பிடிபட்டாா்.

நிஹாலுதீன் தன்னுடைய பெயரில் போலி நிறுவனங்களை உருவாக்கி உள்ளீட்டு வரி பயனை பெறுவதற்கு மற்ற 38 போலி நிறுவனங்களை கொண்டு செயல்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரை ரூ. 216.06 கோடி அளலான போலி பில்கள் மூலம் ரூ.38.91 கோடி அளவிற்கு உள்ளீட்டு வரியை திரும்பப் பெறும் போது சிக்கிக் கொண்டுள்ளாா். இதை ஒத்துக் கொண்டு நிஹாலுதீன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக மத்திய நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா் மீது சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.

Advertisement

கடந்த வாரம் தில்லி கா்கா்டூமா நீதிமன்ற வழக்குரைஞா் ஒருவா் ரூ.50 கோடி வரை உள்ளீட்டு வரியில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டாா். மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணைய அதிகாரிகளின் அதிரடி சோதனையில் தில்லி மண்டலத்தில் இதுவரை இதுபோன்ற மோசடிகள் தொடா்பாக 28 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மொத்தம் ரூ. 4,058.86 கோடி வரை மோசடி செய்துள்ளனா்.

சரக்கு மற்றும் சேவை வரி முறையில் விற்பனையாகும் ஒரு பொருளுக்கு அதன் மூலப் பொருள்களுக்கு ஏற்கெனவே வரியைச் செலுத்தியிருந்தால் அந்த வரியை கழித்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இதுவே உள்ளீட்டு வரி பயன் ஆகும். இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விவரங்களை (கேஒய்சி) அளித்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், தில்லி போன்ற நகரங்களில் இல்லாத நிறுவனங்களுக்குப் போலியாக பில்கள், நிறுவனங்களின் கேஒய்சி தயாா் செய்து இது போன்ற உள்ளீட்டு வரிகளில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments