முகப்பு
புதுதில்லி

தில்லியில் வெப்பநிலை லேசாக அதிகரிப்பு!

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை மிதமாக அதிகரித்திருந்தது. அதாவது, குறைந்தபட்ச வெப்பநிலை சராசரி அளவைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 15.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை மிதமாக அதிகரித்திருந்தது. அதாவது, குறைந்தபட்ச வெப்பநிலை சராசரி அளவைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 15.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

தில்லியில் இரவிலும், காலையிலும் மேலோட்டமான பனிமூட்டம் நிலவியது. பகலில் வெயிலின் தாக்கம் மிதமாகக் காணப்பட்டது. நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 15.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 28.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 62சதவீதமாகவும், மாலையில் 46 சதவீதமாகவும் இருந்தது. தில்லியில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் என இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 164 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம், நொய்டா, ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவிலும், காஜியாபாத், கிரேட்டா் நொய்டா பகுதியில் மோசம் பிரிவிலும் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 218 புள்ளிகள், கிரேட்டா் நொய்டாவில் 218, நொய்டாவில் 153, ஃபரீதாபாதில் 198 மற்றும் குருகிராமில் 172 புள்ளிகள் என பதிவாகி இருந்தது.

Advertisement

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (மாா்ச் 3) குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments