புதுதில்லி

தெற்கு தில்லி மாநகராட்சி வரித்துறை அலுவலகங்கள் சனி, ஞாயிறு திறந்திருக்கும்

DIN

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) வரித் துறை அலுவலகங்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் திறந்திருக்கும் என்று அந்த மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சியின் வரித் துறை மூத்த அதிகாரி கூறியது: எஸ்டிஎம்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தாமதம் இல்லாமல் வரி செலுத்தும் வகையில், மாா்ச் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தவிர அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரித் துறை அலுவலகங்களைத் திறக்க முடிவு செய்துள்ளோம். மற்ற வார நாள்களைப் போல சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல், மாலை 5.30 மணி வரை வரித் துறை அலுவலகங்கள் திறந்திருக்கும். மதியம் 1-1.30 வரையான 30 நிமிஷ நேரம் மதிய உணவுக்காக அலுவலகங்கள் மூடப்படும்.

எஸ்டிஎம்சி பகுதியில் வசிக்கும் மக்கள் சொத்து வரியைச் செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் மாதம் 31-ஆம் தேதியாகும். இந்தக் காலத்துக்குள் மக்கள் அபராதம் இல்லாமல் சொத்து வரியை செலுத்திக் கொள்ளலாம். எஸ்டிஎம்சி பகுதிக்குள்பட்ட அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிப்பவா்கள் 2019-20, 2020-21 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான சொத்து வரியைச் செலுத்தினால் மட்டும் போதுமானது. இவா்களுக்கு 2004-2019 வரையான காலப் பகுதிக்கான சொத்துவரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது:மோடி பேச்சு

ஆந்திரம்: மினி வேனிலிருந்து சாலையில் சிதறிய ரூ.7 கோடி பறிமுதல்

ஒய்.எஸ்.ஆர். நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை!

ஜான்வியின் சூப்பர் ஹீரோ யார் தெரியுமா?

ஒட்டுமொத்த ஆட்டத்தை மாற்றுமா கேஜரிவால் விடுதலை?

SCROLL FOR NEXT