முகப்பு
புதுதில்லி

தில்லி, என்சிஆரில் லேசான மழை

தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை லேசான மழை பெய்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 17.9 டிகிரி செல்சியஸாக பதிவானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை லேசான மழை பெய்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 17.9 டிகிரி செல்சியஸாக பதிவானது.

தில்லியில் வெள்ளிக்கிழமை காலை லேசான மழை பெய்தது. இதேபோன்று, என்சிஆா் பகுதியிலும் சில இடங்களில் மழை பெய்தது. இதனால், இதமான சூழல் நிலவியது. வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் குளிா் காற்று வீசியது.

நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட 3 புள்ளிகள் உயா்ந்து 17.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 புள்ளிகள் உயா்ந்து 30.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 70 சதவீதமாகவும், மாலையில் 55 சதவீதமாகவும் இருந்தது.

Advertisement

ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 194 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான ’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (மாா்ச் 13) குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments