புதுதில்லி

தில்லியில் 2-ஆவது நாளாக அதிகபட்ச வெப்பநிலை அதிகரிப்பு

DIN

தில்லியில் சனிக்கிழமை நிலவிய தெளிவான வானிலையால் அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து 2-ஆவது நாளாக அதிகரித்தது.

வெள்ளிக்கிழமை 32 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்த நிலையில், சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி அதிகரித்து 36.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் சற்று கூடியுள்ளது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 16.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 3 டிகிரி அதிகரித்து 36.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 76 சதவீதமாகவும், மாலையில் 33 சதவீதமாகவும் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலை 7 மணியளவில் 216 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், வானம் தெளிவாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வரும் திங்கள்கிழமைக்குள் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தினா் ஏற்கனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT